ஆனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் இல்லை. எனவே கடலோரத்தில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளியிலும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் கடலோர மீனவ குடும்பங்கள் மிகப்பெரிய பயன்பெறும். மீனவ குடும்பங்கள் அதிகாலையில் கடலுக்கு செல்கின்றனர். அவர்களது குழந்தைகள் பசியோடு இருக்கின்றனர். எனவே கடலோரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார், காலை உணவு திட்டத்தில் அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்து தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரக்கூடிய காலத்தில் நிதிநிலையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...