எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை எளிதாக வீட்டில் இருந்து செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் வழிமுறைகள்:
மத்திய அரசு அனைத்து குடிமக்களையும் நாட்டின் அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் தொடர்பான தரவுகள் அனைத்தும் அரசுடன் இணைக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் ஆதார் எண்ணை வங்கியின் உடன் இணைப்பதற்கு கட்டாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் இதை நிறைவேற்றாமல் உள்ளனர்.
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை இணைப்பதற்கு ஆன்லைன் வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக எளிதாக வீட்டில் இருந்தபடியே தங்களது சேவைகளை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம்.
வழிமுறைகள்:
முதலில் எஸ்பிஐ வங்கியின் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு எஸ் எம் எஸ் ஐ வங்கிக்கு அனுப்ப வேண்டும்.
UID <SPACE> ஆதார் எண் <SPACE> கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.
அதன் பிறகு 567676 என்ற தொலைபேசி எண்ணுக்கு செய்தியை அனுப்ப வேண்டும்.
உங்கள் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுடன் உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். இதன் மூலம் உங்கள் KYC சரிபார்ப்பை முடித்துக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...