ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25 முன்னாள் மாணவர்களை கண்டறிந்து தொடர்ந்து அவர்கள் பள்ளியுடன் பயணிப்பதை உறுதிசெய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் இதுவரை தலைமை ஆசிரியர்களின் முயற்சியால் 5 லட்சத்து 60,056 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியுடன் இணைந்து பயணிக்க பதிவு செய்தனர். அதில் 3 லட்சத்து 68,390 பேர் அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளனர். மேலும் 15,562 பேர் நன்கொடை வாயிலாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...