பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் :282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
விளக்கம்:
அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.
Empty vessels make the greatest noise
குறை குடம் கூத்தாடும்
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள். செல்வந்தர்கள் பசியைத் தேடுகிறார்கள்.-- கிரீஸ்
பொது அறிவு :
1. புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்?
2. புற்று நோய் உட்பட எந்தநோயுமே வராத ஒரே உயிரினம் –
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சங்குப்பூ : சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். வாந்தி உண்டாக்கும். பேதியைத் தூண்டும். தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்
அக்டோபர் 20
ஆனி சலிவன் அவர்களின் நினைவுநாள்
ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார். கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். எலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் எலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார். கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார்.[5] அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் (Harvard University) கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.
நீதிக்கதை
ஒரு பெரியவரிடம் ஐயா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன். “ என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான்" என்றார் பெரியவர், "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்," "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன், "இந்தக் கதையைக் கேள் என்று அவர் சொன்னார் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிற போது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது
இன்பமுமில்லை... துன்பமுமில்லை...' - என்று அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். "மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்!!...
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...