அரசு தொடக்க பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள், 1,000 பேரை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளில், 13,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போட்டி தேர்வு வழியே நிரப்பப்பட உள்ளன.
இந்நிலையில், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 1,000 ஆசிரியர்களை, தற்காலிகமாக நியமிக்க தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. பள்ளி மேலாண்மை குழு வழியாக இந்த நியமனத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனால், தொடக்க பள்ளிகளில் ஓராசிரியர் உள்ள பள்ளிகளில், கூடுதலாக ஒரு ஆசிரியர் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6000 இடைநிலை ஆசிரியர்ககள்அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக இருக்கும் போது ஏன் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை அரசு பயன்படுத்த ஏன் தயங்குகிறது . இதனால் அரசு க்கு நிதியிழப்பு தவிர்க்கப்படும்.உபரி ஆசிரியர்களை அரசு நிரந்தரமாகவே அரசு ஈர்த்துக் கொண்டால் புதிய பணியிடம் நிரப்ப வேண்டிய தேவை ஏற்படாது.இந்த 6000 உபரி ஆசிரியர்கள் இருப்பதால் அரசுக்கு வருடம் தோறும் ரூபாய் 238 கோடி நிதியிழப்பு தவிர்க்கப்படும்.
ReplyDelete