பத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.
பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை, கல்வியாண்டு துவங்கும் முன்பே, வெளியிடப்பட்டு வந்தது. இந்தக் கல்வியாண்டு(2023---24), நான்கு மாதம் நிறைவு பெற்றும், இன்னும் அட்டவணை வெளியிடப்படவில்லை.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கிறது. பொதுத்தேர்வுக்கு பின் தேர்தலா, தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வா என்ற கேள்வி மாணவ, மாணவியர், பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள், 'மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்த கல்வித்துறை உத்தேசித்துள்ளது.
இருப்பினும் அதிகாரபூர்வமாக தேதி விபரம் அறிவிக்கவில்லை,' என மாணவர்களிடம் கூறி வருகின்றனர். பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர், ஆசிரியர், பெற்றோரிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...