இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், யு.கே., கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை இலவசமாக மேற்கொள்ள முடியும். யு.கே.,வின் காம்ன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் வழங்கும் இந்த திட்டம், செப்டம்பர் / அக்டோபர் 2024 முதம் துவங்கும் படிப்புகளுக்கு பொருந்தும்.
தகுதியுள்ள கருப்பொருள்கள்:
வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல் உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளை சமாளித்தல்
* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்புகள்
தகுதிகள்:
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். யு.கே., கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள உரிய தகுதி பெற்றவராக இருப்பதுடன், செப்டம்பர் / அக்டோபர் 2024 சேர்க்கை பெற தயாராக இருக்க வேண்டும்.
* செப்டம்பர் 2023க்குள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
* இரண்டாவது யு.கே., முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு சி.எஸ்.சி., நிதி அளிப்பதில்லை. எனினும், அதன் அவசியம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் நிதி உதவி அளிக்கப்படலாம்.
* எம்.பி.ஏ., படிப்பிற்கு நிதி உதவி அளிக்கப்படுவதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் https://fs29.formsite.com/m3nCYq/omxnv2g3ix/index எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பபதோடு, இந்திய கல்வி அமைச்சகத்தின் https://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் சாக்சாத் இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:காமன்வெல்த் உதவித்தொகை கமிஷனின் இணையதளம் வாயிலாக 17 அக்டோபர் 2023 வரையிலும், இந்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளம் வாயிலாக 25 நவம்பர் 2023 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு: www.education.gov.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...