காலாண்டு விடுமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு நீடிப் செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர்- சா.அருணன் வேண்டுகோள்
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வருகின்ற 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது அதாவது 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 15ம் தேதியும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 19ம் தேதியும் 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற 20ம் தேதி தொடங்கி வருகின்ற 27ம் தேதி அனைத்து தேர்வுகளும் முடிகிறது
28ம் தேதியில் இருந்து 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அக்டோபர் 3ம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை 5,நாட்கள் மட்டுமே, தொடர் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அவசியம் மேலும் விடுமுறை நாட்களில் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதிப்பார்த்து அதை வகுப்பாசிரியரிடமும் அந்தந்த பாட ஆசிரியர்களிடமும் சமர்பித்து ஆசிரியரிடம் அதற்கான மதிப்பெண் பெற வேண்டும்
அதேபோன்று ஆசிரியர்களும் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை மதிப்பீடு செய்து அதனை எமிஸ் இணையத்தில் பதிவேற்றும் வேலைகளில் ஈடுப்பட வேண்டும் இதற்கெல்லாம் கால அவகாசம் இல்லாத சூழல் ஆதலால் காலாண்டு விடுமுறையை ஏற்கெனவே இருந்ததை போன்று குறைந்தது 7 நாட்களுக்காவது விடுமுறை அளிக்க மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர்,மதிப்புமிகு பள்ளிக்கலவித்துறை இயக்குநர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி துறை இயக்குநர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Yes please give 10days leave
ReplyDeleteFor paper correction please please please
DeleteNo need to beg anything from any Government . A day will come to realise their mistakes. That day will be ours.
ReplyDelete