கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு www.tncuicm.com என்ற இணையவழி மூலமாக நேற்று முன்தினம் முதல், வரும் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
பயிற்சியில் சேர குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2023 அன்று, 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி காலம் ஒரு ஆண்டு. பயிற்சி கட்டணம் 18,850 ரூபாய்.மேலும், விவரங்களை www.tncuicm.com என்ற இணையதளத்திலும், டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்-3, பீச்ரோடு, கடலுார் என்ற முகவரியிலும், 04142 222619 என்ற தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...