தமிழ்நாட்டில் பள்ளிக்களில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட எட்டு பாடப்பிரிவுகளில் பணிபுரிய சுமார் 16,000 பேர் 2012 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 13 வருடங்களாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து பல்வேறு காலக்கட்டங்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் பகுதி நேர ஆசிரியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போன்ற தொடர் போராட்டங்களை நடத்தினர். அப்போது எதிர் கட்சியாக இருந்த திமுக தரப்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களாக உள்ள 12,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து சுமார் 26 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனையடுத்து விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது கோட்டை முற்றுகையிடுவோம் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் சு.செல்வம், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிகல்வி துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கைகள் பயன்படுத்தாமல், வாயால் ஒரே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் படத்தை வரைந்து உள்ளார்.13 ஆண்டுகளாக பணிநிந்தரம் செய்யப்படாததால் பகுதிநேர ஆசிரியர்கள் உணவு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கு கடன் வாங்கி கஷ்டப்படுவதாகவும், விலைவாசி உயர்வால் குடும்ப பொருளாதாரத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் தவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களை தமிழக அரசு உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், 'ப்ளீஸ் எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும்' வாசகத்தை எழுதி கைகள் பயன்படுத்தாமல், "வாயால் ஒரே நேரத்தில்" முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் உருவத்தை 15 நிமிடங்களில் வரைந்து ஓவிய ஆசிரியர் செல்வம் நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...