தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்வதற்கு நாளை(செப். 12) முதல் மூன்று நாள்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடத்தப்பட்டது.
இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன.
எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”- தொகுப்பில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...