தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட் சேர்க்கை:
தமிழகத்தில் உள்ள அரசு
மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல்
பட்டப்படிப்பு (பி.எட்) சேர்க்கைக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் செப்டம்பர்
1ஆம் தேதி ஆகிய நாளை முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என்று கல்லூரி கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை செலுத்துவதற்கு செப்டம்பர் 11ஆம்
தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களில் மாணவர்கள் தங்கள் விருப்ப
வரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இளங்கலை
அல்லது முதுகலை படிப்புகளுக்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட
படிப்புகளை முடித்தவர்களும், இளநிலையில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டப்
படிப்பை படித்தவர்களும் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும்
எஸ் சி, எஸ் டி பிரிவினர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் அடிப்படையில்
தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எட் படிப்பிற்கான விண்ணப்பத்திற்கு
பொது பிரிவினர் ரூ.500 மற்றும், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ 250 விண்ணப்ப
கட்டணமாக செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tngasa.in
என்ற இணைய முகவரியில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...