மைக்கேல் பாரடே |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் :265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
விளக்கம்:
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.
Death keeps no calendar
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.பொன்மொழி :
ஒவ்வொரு பெண்ணும்-தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கப்படி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். தந்தை பெரியார்
பொது அறிவு :
1.:உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது?
2. உலகிலேயே மிக ஆழம் கூடிய நதி எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கொண்டைக்கடலை : கொண்டைக் கடலையில் உள்ள மற்றொரு நன்மை என்னவெனில் உங்கள் இதயத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை இதை உட்கொள்வதன் மூலம் பெற முடியும். இது செலினியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளதால் அது இதயத்திற்கு நன்மை பயக்கிறது.
செப்டம்பர் 22
மைக்கேல் பாரடே அவர்களின் பிறந்த நாள்
மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.
நீதிக்கதை
ஒரு சின்ன கிராமம், அங்க ஒரு அழகான குளம் இருந்தது. அந்த குளத்தில் நிறைய தவளைகள் வாழ்ந்து வந்தன. தவளைகள் அங்க இருக்க பூச்சி, கொசுக்கள் அப்படினு சாப்பிட்டு ஜாலியாக இருந்து வந்தன. அந்த கிராம மக்கள் குளத்திற்கு குளிக்க செல்வது வழக்கம்.அந்த குளத்தில் சிறுவர்கள் சென்றால் இந்த தவளை குட்டிகளை மீன் என நினைத்து விடுவார்கள். இதனால் தவளை கூட்டம் மனிதர்கள் நடமாடும் இடத்திற்கு அந்த பக்கமாகவே இருந்து வந்தன. சில நாட்களுக்கு பிறகு இந்த தவளை குட்டிகளை பிடிக்க சில சிறுவர்கள் குளத்திற்கு வந்தார்கள். அவர்கள் எவ்வளவு தேடியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பையன் மட்டும் தூரமாக இருந்த தவளை கூட்டத்தை பார்த்தான். ஏய் அங்க பாரு நிறைய தவளைகள் இருக்கு. இன்னொருவன் சொன்னான், அத வச்சி என்னடா பண்றது , நமக்கு மீன் குட்டி தான் வேண்டும் குளத்தில் கிடைக்குதான்னு பாரு என்றான். சிலர் குளத்தில் குளித்து கொண்டு விளையாடி கொண்டிருந்தார்கள்.அந்த ஒரு சிறுவனுக்கு மட்டும் அந்த தவளை கூட்டம் கண்ணை உறுத்தியது.குளத்தின் அருகில் இருந்து சில கற்களை எடுத்து அந்த தவளைகள் மீது வீச தொடங்கினான். இதை பார்த்த தவளைகள் பயந்து தண்ணீருக்குள் குதித்தன. அந்த சிறுவனுக்கு அது ஒரு விளையாட்டாக தெரிந்தது.
இதையே வேலையாக அவர்கள் வரும்போதெல்லாம் செய்தார்கள். தவளைகள் மிகவும் கலங்கி இருந்தன. ஒரு தவளை மட்டும் சரி இந்த முறை அவர்கள் கல்லால் அடித்தால் நாம் ஏதாவது செய்யலாம் என தன் கூட்டத்திடம் கூறியது. சிறுவர்கள் குளத்திற்கு குளிக்க வந்ததும் , தவளைகளை நோக்கி கல் எறிய ஆரம்பித்தனர். அருகில் இதை பார்த்து கொண்டிருந்த தவளை அவன் மேல் ஏறி குதித்தது. அந்த சிறுவன் பயந்து தண்ணீருக்குள் குதித்தான்.அந்த தவளை சொல்லியது உங்களை போலத்தான் நாங்களும் , இதையே தான் எங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் பயப்பட வைக்கிறீர்கள். நாங்கள் இல்லையென்றால் இந்த குளத்தில் பூச்சிகள், கொசுக்கள் என நிரம்பி வழியும். அதை நாங்கள் சாப்பிடுவதால் உங்களுக்கு எந்த உபாதையும் வராமல் தடுக்க படுகின்றன. இந்த உலகம் நாம் அனைவரும் வாழ்வதற்குத்தான். இயற்கை ஒன்றோடு ஒன்று பிணைக்க பட்டுள்ளது என்றது. மன்னிப்பு கேட்டுக்கொண்ட சிறுவர்கள் பிறகு அப்படி செய்வதை நிறுத்தி கொண்டார்கள்.எனவே யாரையும் வதைக்காமல் , நாமும் நம்மை வதைக்காமல் இந்த வாழ்க்கையை இயற்கையோடு ஒன்றி அதன் அழகை ரசித்து கொண்டே வாழலாம். ஒரு செயலை செய்வதற்கு முன் பல முறை யோசித்து செயல் படுங்கள். அதனால் யாரெல்லாம் பாதிக்கபடுவார்கள் என்பதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...