காவிரி ஆறு கடலில் கலக்கும் இடமான பூம்புகார் |
திருக்குறள் :
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் :260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
விளக்கம்:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
பழமொழி :
Covert all, lose all
பேராசை பெரு நட்டம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.
பொன்மொழி :
புகழ் தான் நம்மை தேடி
வர வேண்டும்… புகழை தேடி
நாம் அலையக் கூடாது. அறிஞர் அண்ணா
பொது அறிவு :
1.தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?
விடை: இங்கிலாந்து
2. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
எள்: எள் எண்ணெய்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை மூட்டு வீக்கம், பல்வலி மற்றும் கீறல்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
நீதிக்கதை
ஒரு பெரிய நகரத்தில் உமா என்கிற பெண் குழந்தை வாழ்ந்து வந்தாள். உமாவின் அம்மா அப்பா இருவரும் அந்த நகரத்திலேயே வேலை செய்து வந்தார்கள். உமாவின் பெற்றோர் அவளின் மீது ரொம்ப பாசம் வைத்திருந்தார்கள். அதனால் உமா என்ன ஆசைபடுகிறாளோ அதை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். அவர்கள் எப்போதெல்லாம் சந்தைக்கு போகிறார்களோ அப்போதெல்லாம் அவளுக்கு பரிசுகள் வாங்கிவிட்டு வருவார்கள். அவள் தன் பெற்றோர்களிடம் ரொம்ப செல்லமாக வாழ்ந்து வந்தாள். உமா ரொம்ப புத்திசாலி. அவள் படிப்பிலும் சிறந்து விளங்கினாள். அதுமட்டுமில்லாமல் எப்பவும் மற்றவர்களுக்கும் உதவி செய்யும் குணம் உடையவள்.
ஒரு நாள் உமா பள்ளிக்கு செல்லும் போது தன் வகுப்பிற்கு வெளியில் கூட்டமாக பசங்க இருப்பதை பார்த்தாள். அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள உமா ஆசைபட்டாள். அவளும் அந்தக் கூட்டத்தின் அருகில் வந்து பார்த்த போது எல்லோரும் உமாவின் தோழியான ஜோதியின் புதுப் பேனாவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். உமாவும் அந்தப் பேனாவைப் பார்க்கிறாள்.அவளுக்கு அந்த பேனா ரொம்ப பிடித்தது. அவள் ஜோதியிடம் ஒரு முறை அந்தப் பேனாவை கேட்டு வாங்கி தன்னுடைய புத்தகத்தில் எழுதி பார்த்தாள். அந்த நேரம் ஸ்கூல் பெல் அடித்தது. உடனே எல்லா பசங்களும் காலை பிராத்தனைக்காக பள்ளி மைதானத்திற்கு சென்றார்கள்.
அந்த நேரத்தில் டீச்சர் உமாவை கொஞ்சம் சாக்பீஸ் கொண்டு வர சொன்னார்கள். அப்போது உமா வகுப்பிற்கு சென்றாள். அவளால் ஜோதியின் பேனாவை பாக்காம இருக்க முடியவில்லை. இன்னொரு முறை அந்த பேனாவை ஜோதியோட பையிலிருந்து எடுத்து பார்த்தாள். அவள் அந்த பேனாவை எப்படியாவது தனதாக்கிக்கொள்ள் நினைத்தாள். அப்போது அந்த வழியாக யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது, அந்த அவசரத்தில் பேனாவை அவள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு யாரென்று பார்த்தாள் அது அவளது மற்றோரு தோழியான தீபா, அவளுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் அவளால் பிராத்தனைக்குப் போக முடியாமல் வகுப்பிற்கு திரும்ப வந்தாள்.
உமா உடனே அங்கிருந்து ஓடி பிராத்தனைக்கு சென்றாள். ஆனால் அந்த பேனா அவள் பாக்கெட்டில் தான் இருந்தது. பிராத்தனை முடிந்ததும் உமா உள்பட எல்லாரும் வகுப்பிற்கு போனார்கள். ஜோதி தன்னுடைய பேனா காணவில்லை என்பதை உணர்ந்து ஆசிரியரிடம் புகார் செய்தாள்.உடனே ஆசிரியர் வகுப்பில் இருந்த எல்லோரையும் கூப்பிட்டு பிராத்தனை நடைபெற்ற நேரத்தில் யார் வகுப்பில் இருந்தது என்று கேட்டார்கள். எல்லோரும் தீபாவை கை காட்டினார்கள். தீபா அப்பாவி அவளுக்கு அந்த பேனாவை பற்றி எதுவும் தெரியாது.
ஆசிரியர் தீபாவை ரொம்ப திட்டினார்கள். பேனாவை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தீபா சொன்னதை அந்த ஆசிரியர் கண்டுக்கவே இல்லை. கடைசியாக அந்த ஆசிரியர் “நான் உனக்கு ஒரு நாள் டைம் தாரேன் அதுக்குள்ள உண்மையை சொல்லனும் இல்லை என்றால் உன்னை தலைமை ஆசிரியரிடம் கூட்டிகிட்டு போக வேண்டியிருக்கும் என்றார்கள்.ஆசிரியர் சொன்னத கேட்ட உமா ரொம்ப பயந்து போய் ஒன்றுமே பேசாமல் இருந்தாள். அன்றைய வகுப்பு முடிந்து சாயங்காலம் உமா வீடு திரும்பினாள். அன்று முழுவதும் அவள் செய்த தப்பை நெனைச்சுக்கிட்டு இருந்தாள். அவளால் தான் தீபா ஆசிரியரிடம் திட்டு வாங்கினார். அந்த குற்ற உணர்ச்சியால் அவளால் அன்றைக்கு தூங்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் உமா பள்ளிக்கு போனாள். அவள் வகுப்பிற்கு உள்ளே போகும்போது தீபா அழுவதை பார்த்து உமா உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆசிரியர் வந்து தீபாவை உண்மையை சொல்ல சொன்னார்கள். உடனே உமா அவள் கையை பிடித்து " அந்த பேனா என்கிட்ட தான் இருக்கு நேற்று உண்மையை சொல்ல நான் பயந்தேன். என்னை மன்னிச்சிடுங்க நான் இனிமேல் இந்த மாதிரி எதுவும் பண்ண மாட்டேன்” என்று சொன்னாள் உமா. அனைவரும் ஆச்சரியமாக உமாவை பார்த்தனர்.ஆசிரியர் உமாவை பாராட்டினார்.
நீதி: நாம் தெரியாமல் தவறு செய்தாலும் உமாவை போல நம் தவறை திருத்திக் கொண்டு நேர்மையாக இருக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
மிக சிறப்பு
ReplyDelete