வ.உ.சி. இழுத்த செக்கு |
திருக்குறள் :
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் :254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
விளக்கம்:
கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.
பழமொழி :
Calm before storm
புயலுக்கு முன் அமைதி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
ஆசிரியரின் பெருமைகள் அனைத்தும் மாணவர்களிடமும், அவர் விதைத்த விதைகளின் வளர்ச்சியிலும் உள்ளன. – டிமிட்ரி மெண்டலீவ்
பொது அறிவு :
1.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சோம்பு: சோம்பு கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா வறட்டு இருமல், மூக்குல நீர் வடியுறதெல்லாம் சரியாகும்.”
செப்டம்பர் 05
வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள்
டாக்டர் இராதாகிருஷ்ணன் |
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ( 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975[1]) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
மு.மேத்தா |
மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்..
நீதிக்கதை
ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள தானியங்களை சாப்பிட்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வாழ்ந்தன. ஒருநாள் அந்த வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக கொழுத்த பூனை வந்து சேர்ந்தது. அதன் இஷ்டப்படி எலிகளை வேட்டையாடிக் கொன்று தின்றது.
எலிகள் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடின. வீட்டின் ஒரு மூலையில் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அவை கூட்டம் போட்டுத் தங்கள் குறைகளைக் கூறின.
வயதான எலி, பிள்ளைகளே, கவலைப்படாதீர்கள், இப்பொழுது நாம் இங்கு கூடியுள்ள, பொந்து (வளை) தான் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, முடிந்த வரை நாம் வெளியே செல்லாமல் இங்கேயே இருந்து விடுவோம் என ஆலோசனை வழங்கியது.
அத்திட்டம் நல்லதாக இருப்பதால், அதனை அனைத்து எலிகளும் ஏற்றுக் கொண்டன. எலிகள் யாவும் வளைக்குள்ளேயே இருந்தன. எலிகளின் நடமாட்டம் குறைந்ததால், பூனைக்கு இரை கிடைக்காமல் போனது.
எனவே மயங்கியது போல் நடித்தது. பூனை இறந்து விட்டது என நினைத்து, எலிகள் வெளியே நடமாட ஆரம்பிக்கும். அப்பொழுது எலிகளைப் பிடித்து விடலாம் என தனக்குள் கணக்குப் போட்டது.
மயங்கியது போல் நடித்த பூனை, அப்படியே தூங்கியும் விட்டது. எவ்வளவு நேரம் தூங்கியதோ பாவம், பசிக் களைப்பில் அதிக நேரம் தான் தூங்கி விட்டது.
அதிகப் பசியுடன் கண்விழித்துப் பார்த்தது. சற்று தூரத்தில் எலிகள் இஷ்டம் போல் விளையாடிக்கொண்டிருந்தன. 'ஆகா, எவ்வளவு தைரியமாக விளையாடுகின்றன. இவைகளை விட்டேனா பார், இன்று இவை நமக்கு நல்ல இரை தான்” என மகிழ்ந்து பூனை தாவிக் குதித்து ஓடியது.
திடீரென வந்த மணியோசையைக் கேட்ட எலிகள் தலை தெறிக்க ஓடித் தப்பியது. பூனைக்கும் ஒரே ஆச்சரியமாகி விட்டது. மீண்டும் ஓடியது மணியோசை எழுந்தது. இந்த மணியோசை எங்கிருந்து வந்ததென ஆராய்ச்சி செய்தது. பூனை தூங்கும் பொழுது அதன் கழுத்தில் மணியைக் கட்டி விட்டன கெட்டிக்கார எலிகள்.
நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. யானைக்கும் அடி சறுக்கும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...