திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் :252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
விளக்கம்:
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
பழமொழி :
Blue are the hills that are far away
இக்கரைக்கு அக்கரை பச்சை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.
2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.
பொன்மொழி :
காலையில் கண் விழித்ததும், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்தால் அது பிரகாசமான நாள். இல்லை என்றால், இல்லை.
எலன் மாஸ்க்.
பொது அறிவு
1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
உளுத்தம் பருப்பு தோலில் ஏற்படும் தழும்புகள், ஆதீத சூரிய ஒளியால் தோல் கருத்துப் போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருப்பு உளுந்து அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் தீர்கிறது.
செப்டம்பர் 02
உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.
வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது
நீதிக்கதை
நமக்கு வரும் கஷ்டமே நமக்கு அளிக்கப்பட்ட உதவி..!! அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன். யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன். அன்று வீட்டின் முற்றத்தில் மறந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். வீட்டு முன் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாகப் பார்த்த போது, ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில் பட்டது . மகரயாழ் அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான் . ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான், வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டி விட்டான் . அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம், வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக ! நேரம் கடந்தது, ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தபாடில்லை ! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொற்றியது . வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டிருந்தது ! அவன் திகைத்து நின்றான். கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளிவரும் போது வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்குத் தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும். அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு, அதற்கு எமனாகி விட்டது | நமக்கு வரும் கஷ்டங்கள், நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி . அதனால் அதை ஏற்றுக் கொண்டு பயிலுவோம், எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே, அந்த கஷ்டமே உனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உதவி.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...