தமிழக அரசின் பல்வேறு துறைகளில்
உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.
அதன்படி துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1
பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு
மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை
1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.
அவர்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வு எழுத வேண்டும்.அந்த வகையில் குரூப் 1 முதன்மைத்தேர்வு ஆகஸ்ட 10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு, விரிவாக எழுதுதல் உட்பட 4 தாள்களாக தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதை www.tnpsc.gov.in/, http://www.tnpscexams.in/ ஆகிய இணையதளங்களில் சென்று தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...