முன்பு கோவை மண்டல தணிக்கை துறை...
கிட்டத்தட்ட M.Phil என்றாலே (அதுவும் 2007 க்கு பிறகு எனில் கட்டாயம்) தணிக்கை என்ற நிலை
குறிப்பாக வழக்கு எண் _42657/2016_ தீர்ப்பு நாள் 6/9/18 ... காரணம் காட்டி எல்லோருக்கும் தடை என்ற நிலை ..
தற்போது மண்டல தணிக்கை துறை இல்லை....
ஆனாலும் சென்னையில் வரும் தணிக்கையிலும்
தற்போது 2007 க்கு பிறகு எனில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் , அரசாணை 91 உயர் கல்வி துறை நாள் 3/4/2009இன் படி M.Phil தணிக்கை தடை செய்யப்பட்டு வருகிறது
இதற்கு மிகப் பெரிய தீர்வு கிடைத்துள்ளது
சென்னை நீதிமன்ற வழக்கு 2328/2018 தீர்ப்பு நாள் 4/8/23...
பத்தி 34. . இல் அரசாணை 91 நியமனம் பற்றி மட்டுமே சொல்கிறது அது ஊக்க ஊதிய உயர்வு சொல்லவில்லை என்று மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கியுள்ளது
பத்தி 35 order....
6/9/18 நாளிட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது
ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருபவர்கள் தொடரலாம் ...
இந்த தீர்ப்பு காரணமாக 2007-2009 வரை தடை செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திரும்ப வழங்க வேண்டும்
இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட சிவன் சாருக்கு வாழ்த்துகள் மட்டும் பாராட்டுக்கள்
தணிக்கை தடை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு இது மிகப் பெரிய நிம்மதியான தீர்ப்பு
தீர்ப்பு நகல் Download Here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...