ஒப்பற்ற திருநாடாகும். அப்படியிருக்க, மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை அவர்தம் செம்மைப்பணிகளைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியர் திருநாளில் ஒரு குறிப்பிட்ட தரப்பு ஆசிரியர் சமூகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதென்பது ஏற்கத்தக்கது அல்ல. எம் பிரதிநிதிக்கான வாய்ப்பும் அங்கீகாரமும் வரவேற்பும் கொடுக்கப்படாத இடத்தில் தமக்கென்ன வேலை வேண்டிக்கிடக்கிறது என்று புறந்தள்ளிக் கடந்து செல்லும் நோக்கும் போக்கும் இதன் காரணமாக ஒவ்வொரு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் எழுவதைத் தடுக்க இயலாது.
எங்கும் எதிலும் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கூட்டு வளர்ச்சியில் தான் ஒரு நாட்டின் ஆன்மா பொலிவுறும்; வளமுறும். எல்லா பூக்களையும் பூக்க விடுவதுதான் பன்மைப் பூத்த பாரத மண்ணின் அடையாளம் ஆகும். இதை யாரும் மறப்பதும் மறுதலிப்பதும் திட்டமிட்டுத் தவிர்ப்பதும் ஒருபோதும் அழகல்ல.
அவரவர் தம் தனித்துவ அடையாளங்களைத் தேடுவதும் அதுகுறித்து பேசுவதும் பாதிக்கப்படும்போது உரிமைக்காகக் குரல் எழுப்புவதும் உலக சூழலில் அடையாள அரசியலாகப் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் வாயில்லாப் பூச்சிகளாக இருக்கும் காலம் அருகிவிட்டது. இஃது இயற்கையானதும் இயல்பானதும் கூட.
இனிவரும் காலங்களில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் அரும்பெரும் பணியில் ஈடுபடும் நடுவர் குழு கட்டாயம் தொடக்கக்கல்வியில் மூச்சு விடக்கூட நேரமின்றி நாளும் பொழுதும் மாணவர்களுக்காக உழைத்தும் மாணவர்களுடன் உழன்றும் வருகிற தொடக்கப்பள்ளி ஆசிரியர் பேரினத்துள் தகுதி மிக்க ஒருவரையாவது பரிசீலனை செய்ய முன்வருவது என்பது இன்றியமையாதது. 'எம்மில் ஒருவருக்குக் கூடவா தேசிய நல்லாசிரியர் விருதைப் பெறத்தக்க தகுதி இல்லை!' என்கிற கேள்வி இதுபோன்ற இனிய சூழலில் எழாமல் இருக்கும். அதுவரை குறையொன்று இருக்கிறது என்று தொடக்கக்கல்வி ஆசிரியர் சமூகத்தின் புலம்பல்கள் தொடரத்தான் செய்யும்!
எழுத்தாளர் மணி கணேசன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...