எண்ணும் எழுத்தும் மூன்றாம் நபர் மதிப்பீடு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தொடக்க நிலை ஆசிரியர் இயக்கங்களும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்... இப்பொருள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மதிப்புமிகு. இயக்குநர் அவர்கள் டிட்டோஜாக் அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இன்று பிற்பகல் 2 மணியளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக இப்பொருள் சார்ந்து ஒருமித்த முடிவினை மேற்கொள்வதற்காக இன்று 29.08.2023 செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணியளவில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
எண்ணும் எழுத்தும் சார்ந்த மதிப்பீட்டு பணியில்பி.எட் மாணவர்களை பயன்படுத்துவது என்னும் தவறான புரிதல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.பொதுவாகவே மாணவர்களின் கேள்வி பதில் தாளை ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு மாணவர்களின் பூர்த்தி செய்ய முடியாத இடர்பாடு உண்டு. ஆகவே பி எட் மாணவர்கள் குழந்தைகள் கூறும் விடைகளை அந்தந்த விடைத்தாள்களில் பூர்த்தி செய்து கணினி வழி மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு உதவுவார்களே ஒழிய வேறு எந்த செயல்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.
ReplyDelete