தமழக அரசு 2023-2024 ம் கல்வியாண்டிற்கு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல்
மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இதன்
தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில், 2023 2024ஆம் கல்வி ஆண்டில்
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரிக்கான பொது மாறுதல் கோருபவர்களுக்கான
கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகைமை EMIS இணையதள வழியாக
மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், அரசாணை எண்:176. பள்ளிக்கல்வி (பக5(1) துறை, நாள்: 17.12.2021ல்,
தெரிவித்தவாறு கீழ்காணும் அறிவுரைகளை அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் தங்களின் சுயவிவர அடங்கிய விண்ணப்பங்களை EMIS
இணையதளத்தில் எவ்வித பிழையின்றி பட்டியலில் தெரிவித்தவாறு பதிவேற்றம்
செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமாறுதல்
கலந்தாய்வில் கலந்துக்கொள்ள, விண்ணப்பிப்பவர்கள் தற்பொழுது பணிபுரியும்
பள்ளியில் ஓராண்டு பணி நிறைவு செய்து இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனையை
கடைபிடிக்கத் தேவையில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...