Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க புதிய இணையதளம் அறிமுகம்

தொலைந்த செல்போனை கண்டுபிடிப்பதற்காக ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறையின் புதிய இணையதளம் அறிமுகம் செய்யபட்டுள்ளது. மத்திய சாதன அடையாள பதிவின் மூலமாக, ஐ.எம்.இ.ஐ. எண்ணை பயன்படுத்தி செல்போனை 24 மணிநேரத்தில் முடக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இதுவரை சிம் கார்டுகள் மட்டும் முடக்கப்பட்டு வந்த நிலையில் செல்போன்களை முடக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யபட்டுள்ளது.

தமிழக சைபர் கிரைம் பிரிவுடன் இணைந்து இந்திய தொலைதொடர்பு அமைச்சகம் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது. தொலைதொடர்பு பயனாளர்களின் டிஜிட்டல் பயண்பாட்டை பாதுகாப்பாக செயல்படுத்துவதற்காக SANCHAR SAATHI  என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இணையதளம் கடந்த மே மாதம் முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இதில் குறிபாக செல் போன் பயன்பாட்டாளர்களுக்கு பயன்படும் வகையில், பல்வேறு வசதிகள் செயதுகொடுக்கபட்டுள்ளது. குறிப்பாக உங்கள் பெயரில் எத்தனை செல் போன் எண்கள் உள்ளது என்பது குறித்து இந்த இணையதளம் மூலமாக கண்டுபிடிக்களாம்.

அதே நேரத்தில் “KYM” (KNOW YOUR MOBILE) என்ற வசதி மூலமாக உங்கள் மொபைல் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். ஒரு செல்போனை வாங்குவதற்கு முன்னதாக அது புதிய மொபைலா, திருடபட்ட மொபைலா, எத்தனை வருடம் அந்த மொபைல் பயன்பாட்டில் இருந்தது, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறாக செல்போன்கள் குறித்தும், செல்போன் பயனாட்டாளர்களின் பெயரில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்பது குறித்தும், அறிந்துகொள்ளும் வகையில் இந்த இணையதளம் இருந்து வந்த நிலையில் தற்ப்போது செல்போன்கள் தொலைந்துபோனால் அதனை கண்டுபிடிப்பதாற்கான வசதிகளையும், தற்போது தீவிரமாக அமல்படுத்தபட்டுள்ளது.

அதன்படி CEIR (Central Equipment Identity Register) என்ற வசதி மூலமாக உங்கள் செல்போன் காணாமல் போன உடனேயே உங்கள் செல்போன் IMEI நம்பரை இந்த இணையதளத்தில் பதிவிட்டு 24 மணிநேரத்தில் தொலைந்து போன அல்லது திருடுபோன செல்போனை முடக்கும் வசதி உருவாக்கபட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்துவதற்காக தமிழக சைபர் கிரைம் பிரிவுடன், மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் இணைந்து அதற்கான வசதிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனை பயன்படுத்துவதற்கான வசதிகளை செய்துகொடுத்துள்ளது. காவலர்களும், தொலைந்த செல்போன் பயனாளர்களும் செல்போனை முடக்க முடியும்.

அவ்வாறு முடக்கபட்ட பிறகு அந்த செல்போனில் யாரேனும் புதிய சிம் கார்டை பயன்படுத்தினால், அதுகுறித்த தகவல்கள், காவல்நிலையத்திற்கும், செல்போன் பயனாளர்களுக்கும் தெரிவிக்கபடும். செல்போன் எந்த இடைத்தில் உள்ளது என்ற தகவலும் வரும். இதன் மூலம் தொலைந்த, திருடுபோன செல்போனை கண்டுபிடிக்கும் வசதி இந்த இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் திருடபட்ட தொலைந்துபோன செல்போன்களின் 25,135 சிம்கார்டுகள் முடக்கபட்டுள்ளன. நாடு முழுவதும் 7,25,900 செல்போன்கள் முடக்கபட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,95,846 செல்போன்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive