Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 76 - ஆவது சுதந்திர தின வாழ்த்துகள்

images%2528193%2529

எங்கள் நாடு

பெருமை கொள் பெருநிலம்

நிறைய மாநிலம்

பல்வகை மொழியினம்

மனதால் ஓரினம்

இமயந்தொட்டுக் குமரிவரை

உண்டெங்கள் உயிரோட்டம்

இந்தியனுக்கோர் இன்னலென்றால் பொங்கியெழும் பெருங்கூட்டம்

மதமா இனமா மொழியா

இவற்றால் இல்லை வேறுபாடு

விஷமத்தனமாய் ஊறுசெய்ய எவனெழுந்தாலும் கூறுபோடு

பல்வித வண்ணக்களஞ்சியமே எங்கள் தேசம்

பிரிவினை விதைத்து எவனாலும் செய்யவே இயலாது பெருநாசம்

வேஷதாரிகளுக்கு ஒருபோதும் இங்கில்லை வாசம்

எங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தியா இந்தியா இந்தியா

அதுதான் உயிர் சுவாசம்

அன்பினில் தழைத்து

அனுதினம் உழைத்து

தேசமுயர்த்துவோம்

அடிமை வாழ்வை அடித்து நொறுக்கிய புனித நன்னாள் அதைப் பெருமையாய்ப்  போற்றுவோம்

முன்னோர் சிந்திய ரத்தங்களின்றி இந்திய விடுதலை இல்லை தொல்லைகள் களைந்த அவர்தம் தியாகங்களுக்கு என்றுமே இல்லை எல்லை


பசியும் பஞ்சமும் கடந்து

பல்லுயரம் காணவே உழைப்போம்

அகிலத்தில் தேசத்தை உயர்த்தி

நாம் அனைவரும் நன்றாய் செழிப்போம்


கோடிக்கரங்களும் இணைந்து

கொடுவறுமையை அடியோடு ஒழிப்போம்

மூடப்பேய்களை எல்லாம் ஓட ஓட அழிப்போம்


புனித மண்ணிதில் புதுமைக் கல்வியை விதைப்போம்

பேதமில்லா நிலைபெருக

ஒன்றாய் பெருந்தேர் இழுப்போம்


எங்கள் நாடிது

எங்கள் நாடிது

சொல்லச்சொல்ல நெஞ்சினில் இன்பம் கூடுது

ஒருமை உணர்வு நிரம்பியே எங்கள் குருதி ஓடுது


அமைதியும் வளமும் நிரம்பச் சேர்ப்போம்

அதற்காய் இணைந்து கைகள் கோர்ப்போம்

யாவரும் பொதுவென சபதம் ஏற்போம்


இன்னொரு காந்திக்கு வேலை தராது

இன்னொரு முறை 

நாம் அடிமை படாது

ஒற்றுமை சுமந்து தேசம் வளர்ப்போம்

இந்தியராய் புவிதனில் பெருமை சுமப்போம்.


இனிய விடுதலை நாள் வாழ்த்துகள் 🇮🇳 🇮🇳





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive