சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு, 4,683 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில், 1,226 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 551; அகில இந்திய ஒதுக்கீடுக்கு 313 என, 2,090 இடங்கள் உள்ளன.
இந்த மூன்று ஒதுக்கீட்டுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. இந்த படிப்புகளில் சேர, அரசு ஒதுக்கீட்டுக்கு 2,689 பேர், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1,048 பேர், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 946 பேர் என, 4,683 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை தேர்வுக்குழு தலைவர் மலர்விழி கூறுகை யில், ''விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி துவங்கியுள்ளது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, செப்., 15ம் தேதிக்கு பின், மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...