நீலகிரி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
29-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய பொருட்டு செப்டம்பர் 16-ம் தேதி பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29-08-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
29-08-2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 23-09-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும.
திருப்பூர்
ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
கோவை
ஓணம் பண்டிகையையொட்டி, வருகிற 29-ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இந்த அலுவலகங்கள் அடுத்த மாதம் 2-ந்தேதி (சனிக்கிழமை) முழு பணி நாளாக செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hhhhhhhhhhhhh
ReplyDeleteHii
ReplyDelete