திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்:அருளுடைமை
குறள் :244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
விளக்கம்:
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
பழமொழி :
Better an open enemy than a false friend
போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்
இரண்டொழுக்க பண்புகள் :
1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்
பொன்மொழி :
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. ___அப்துல் கலாம்
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் இயற்கையின் சொர்க்கம் எது?
English words & meanings :
Venomous - poisonus விஷம் நிறைந்த
ஆரோக்ய வாழ்வு :
கடுகு - ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. கடுகை குறைந்த அளவுக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
ஆகஸ்ட்23
அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது
நீதிக்கதை
ஓர் ஊரில் ஒரு குருகுலம் நடந்து வந்தது.அங்கு பயின்று வந்த சீடர்கள் அனைவருமே பெரும் திறமைசாலிகள் என்று அனைவராலும் பேசப்பட்டும் வந்தது.அந்த குருகுலத்தில் வருடாவருடம் சிறந்த சீடன் யார் என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த சீடன் என்ற பட்டமும் வழங்கப்படும்.இந்த வருடமும் யார் சிறந்த சீடன் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது.குருகுலத்தின் தலைமை குருவும் யார் சிறந்த சீடன் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆலோசனையில் இறங்கினார்.குருகுலத்தில் உள்ள அனைத்து குருக்களையும் அழைத்தார்.அவர்களிடம் ஆலோசனை நடத்தினார் யார் சிறந்த மாணவன் என்று. இறுதியாக எல்லோரிடமும் கலந்து பேசி ஒரு மூன்று சீடர்களை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் சிறந்த சீடன் என்ற பட்டம் ஏதேனும் ஒரு மாணவனுக்கு தான் சென்று சேர வேண்டும் என்பது குருகுலத்தில் விதிகளில் ஒன்று.ஆனால் இந்த மூன்று மாணவர்களும் ஒருவருக்கொருவர் எதிலும் விட்டுக்கொடுத்தவர்கள் இல்லை.கல்வி, வீரம் மற்ற கலைகள் என எல்லாவற்றிலும் சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.மிகுந்த யோசனைக்கு பிறகு ஒரு போட்டியின் மூலம் மூவரில் யார் சிறந்தவர் என்று கண்டுபிடிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார்.இப்பொழுது என்ன போட்டி வைக்கலாம் என்று யோசித்தார்.
சரி வாருங்கள் சீடர்களே உங்களுக்கு ஒரு வேலை சொல்வதற்காக தான் உங்களை இங்கு அழைத்தேன்.அதை நீங்கள் மறுத்து விடக் கூடாது என்றார்.சீடர்களும் நாங்கள் நிச்சயம் நீங்கள் சொல்லும் வேலையை செய்து முடிப்போம் குருவே கூறுங்கள் என்றனர்.
நான் ஆசை ஆசையாக ஒரு கிளி ஒன்றை கூண்டில் வைத்து வளர்த்து வந்தேன்.அதற்கு உணவு அளிப்பதற்காக இன்று காலை கூண்டை திறந்தேன் அந்த நேரத்தில் அந்த கிளி கூண்டை விட்டு வெளியே வந்து பறந்து சென்றுவிட்டது.எனக்கு அந்த கிளியென்றால் மிகவும் பிரியம் எனக்காக அந்த கிளியை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும் என்றார்.
குருவும் தன் சீடர்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்றார்.அங்கு நீண்ட மற்றும் அகலமான ஆறு ஒன்று தெரிந்தது.அதை தாண்டி ஒரு சிறு தீவு தெரிந்தது.என் கிளி இந்த ஆற்றை கடந்து அந்த தீவுக்கு தான் சென்றது என்றார் குரு.அப்பொழுது அங்கு பழுதடைந்த நீண்ட பாலம் ஒன்று இருந்தது.அதன் வழியாக அந்த ஆற்றை கடக்கலாம்.ஆனால் அந்த பாலத்தின் வழியாக ஒரு நேரத்தில் ஒரு சீடர் மட்டும் தான் செல்ல முடியும்.
முதலாவதாக இருந்த அந்த சீடர், தான் அந்த பாலத்தை கடந்து கிளியை கொண்டு வருவதாக கூறி பாலத்தில் ஏறி நடக்க ஆரம்பித்தார்.இந்த சீடர் நடக்க நடக்க பாலம் ஆடிக்கொண்டே இருந்தது.எப்படியாவது கிளியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறி நடந்தான்.ஆனால் தீடீரென பாலத்தின் நடுவே சிறிது தூரம் எந்த ஒரு கட்டைகளும் இல்லாமல் பாலம் சிதைந்து இருந்தது.இந்த இடைவெளியை எப்படி கடப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு ஒரு யோசனை தோன்றியது பாலத்தின் ஒரு பக்கத்தை பிடித்து தொங்கிக் கொண்டே இந்த இடைவெளியை கடந்து விடலாம் என்று யோசித்தான்.அவ்வாறே பிடித்து தொங்கிக் கொண்டே நகர்ந்தான்.பாதி தூரம் சென்றதும் கை வலி பின்னியது.பாலத்திலிறுந்து கீழே உள்ள ஆற்றில் விழுந்தான்.ஆற்றில் முதலைகள் இருப்பதை அறிந்து உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீச்சல் அடித்து கரைக்கு திரும்பினான்.இவ்வாறு மூவரும் ஆற்றில் விழுந்து நம்மால் இந்த பாலத்தை கடக்கவே முடியது என்ற மனநிலையை தங்களுடைய முகத்தில் சுமந்து கொண்டு சோகமாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர்.
குரு அவர்கள் மூவரையும் பார்த்தார்.சிறந்த சீடனுக்கான தகுதி இவர்களிடத்தில் இல்லை என்று அங்கிருந்து கிளம்ப முயற்சித்தார்.அப்பொழுது அங்கு இருந்த மூன்றாவது சீடன் எழுந்து வந்தான் குருவே எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டான்.நான் மீண்டும் முயற்ச்சிக்க விரும்புகிறேன் என்று கூறினான்.
குரு இந்த மூன்றாவது சீடனை சிறந்த சீடன் என்று அங்கீகரித்து தேர்வு செய்தார்.
கதையின் நீதி :
அந்த குருவிற்கு தெரியும் இல்லாத பறவையை யாராலும் கொண்டு வர முடியாது என்று.எனினும் தன்னுடைய சீடர்களின் மனநிலையை தெரிந்து கொண்டு அவர்களில் யார் ஸ்திரத்தன்மை வாய்ந்தவர்கள்.மனதளவில் சக்திவாய்ந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவே இப்படி ஒரு போட்டியை வைத்தார்.அதில் மூன்றாவது சீடன் மற்ற இருவரை விட மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்ததால் அவனை சிறந்த சீடன் என்று அங்கீகரித்து தேர்வு செய்தார்.
முயற்சி செய்தால் மட்டும் அல்ல,முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...