வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு ஒரே பிரச்சனையாக இருப்பது வேலைவாய்ப்பு தான். அதனால் அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் வேலை வழங்குபவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் என 4000 பேர் கலந்து கொள்ளலாம் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாமில் தொழில்முறையாளர்கள், பட்டதாரிகள், டிப்ளமோ பெற்றவர்கள், ஐடிஐக்கள், நர்சிங், ஹெச்எஸ்சி, எஸ்எஸ்எல்சி, எஸ்எஸ்எல்சிக்கு கீழே, டெய்லரிங் போன்ற படிப்புகள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். அதே போல இந்த முகாமில் கலந்து கொள்ள வேலை வழங்குபவர்கள் https://forms.gle/3irie6FysPwH8w6K6 என்ற விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அதே போல வேலை தேடுபவர்கள் https://forms.gle/zyiyyRnNnvRFLt1D9 என்ற லிங்க் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0451-2904065 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...