பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் :
பணிநிரந்தரம்
செய்வதாக திமுக கொடுத்த 181-வது தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின்
நிறைவேற்ற வேண்டும் என அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள்
தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதம் ஆகிறது.
ஆனாலும் பகுதிநேர ஆசிரியர்களை முன்னேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இன்னும் அதிமுக ஆட்சியில் வழங்கிய 10ஆயிரம் ரூபாய் சம்பளம் தான் கிடைக்கிறது.
விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் இந்த குறைந்த சம்பளத்தில் தவிக்கின்றனர்.
திமுகவை
தவிர மற்ற அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டசபையில் பகுதிநேர
ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளார்கள்.
மக்கள் மன்றத்திலும் அனைத்து கட்சிகளும் இதை வலியுறுத்தி உள்ளது.
எனவே
முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்து திமுக
181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை
பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கூறியது :
சமூக நீதி, சமூக முன்னேற்றம் குறித்து பேசிவரும் தமிழக
முதல்வர்
அவர்கள், 12ஆண்டாக தற்காலிகப் பணியில் அதுவும் ரூபாய் 10ஆயிரம் என்ற
குறைந்த சம்பளத்தில் தவிக்கின்ற 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை
பணிநிரந்தரம் செய்து முன்னேற்ற வேண்டும்.
இந்த கோரிக்கைகூட திமுக தேர்தல் வாக்குறுதி தான்.
இதை வலியுறுத்தி முதல்வர் கையில் பலமுறை மனு கொடுத்து உள்ளோம்.
பல கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் வலியுறுத்தி உள்ளார்கள்.
பணி பாதுகாப்பு இல்லாமல் தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களை மனிதநேயத்துடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
------------------------------ ----------
S.செந்தில்குமார்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
செல் : 9487257203
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...