Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2023

 

 

வைணு பாப்பு



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்

குறள் :235

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.



விளக்கம்:

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.



பழமொழி :

Ass loaded with gold still eats thistles

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும். விவேகானந்தர்

பொது அறிவு :

1. அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய சிவிலியன் விருது எது?

விடை: சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம்.

2. புலிட்சர் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: கோபிந்த் பிஹாரி லால்.

English words & meanings :

 fragment - a small part broken off or separated from something. noun.துண்டுகள். பெயர்ச் சொல்.garment -an item of clothing. noun. ஆடை. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு : 

வெந்தயம் : இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ  அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.

ஆகஸ்ட்03

வைணு பாப்பு   அவர்களின் பிறந்தநாள்

மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappuஆகஸ்ட் 101927 - ஆகஸ்ட் 191982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிருவுவதற்கு முக்கிய காரணமாவார்.

நீதிக்கதை

விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். 

அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?” என்று கேட்டான். 

இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது” என்றான். இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார். 

மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.

நான்காவது அறிஞர், “அரசே, நம்ம பூமிக்கு வேண்டியஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது” என்றான். ஐந்தாவது அறிஞர், “வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயணும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது” என்றார். 

இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து, “அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்?. அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது?. பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம்?. அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்”.

ஆகவே, அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்க பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ? அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார். 

அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார். மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலை பாராட்டினார். 

நீதி : காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாத பொருள். காலத்தை தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனவே இளமையிலே நன்கு கற்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

03.08. 2023

*ஆகஸ்ட் 14ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு.

*சிக்கலில் சீன பொருளாதாரம்; வீழ்ச்சி அடையும் இந்திய பங்குச்சந்தை.

* என்.எல்.சி அனல்மின் நிலையத்தால் கடலூர் கிராமங்களில் சுகாதார சீர்கேடு ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.

* நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு 225 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு-முதல்வர் பேச்சு.

*கிராமப்புற இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வரும் 12ஆம் தேதி தொடக்கம்.

*உலக தடகளப் போட்டி: நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய அணி பங்கேற்பு- 4 தமிழக வீரர்களுக்கு இடம்.

Today's Headlines

* Tamil Nadu government order to provide sweet pongal to government school students on 14th August.

 *Chinese economy is in trouble leading to a decline in the Indian stock market.

 * Shocking information in a survey report on health degradation in Cuddalore villages due to the NLC power plant.

 * 225 government school students got selected for premier educational institutes of the country – chief minister.

 *Best opportunity for rural youth Isha Gramotsavam competitions will start on the 12th.

 *World Athletics: Indian team participation led by Neeraj Chopra in which 4 Tamil Nadu players are also placed.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive