Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2023

 

 

பரம் வீர் சக்ரா விருது



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

விளக்கம்:

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.



பழமொழி :

As rare as hen's teeth

அத்தி பூத்தார் போல.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது எது?

விடை: பரம் வீர் சக்ரா.

2. இந்தியாவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது எது?

விடை: தேசிய திரைப்பட விருது.

English words & meanings :

 neu·ro·ma·ta - a tumor formed of nerve tissue., noun. நரம்பு கட்டி. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு : 

வெந்தயம்: சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.

நீதிக்கதை

ஒரு நாள் சுந்தர், சிவா என்ற இரண்டு நண்பர்கள் வேலை சம்மந்தமாக பக்கத்து ஊருக்கு சென்றார்கள். அப்போது, இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டதாலும் இருவரும் விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த சமயத்தில், அவர்கள் எதன்மீதோ கால்தடுக்கி எப்படியோ உருண்டு ஆழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை. ஆனால், மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்த பிறகு வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. ஏனென்றால், அவர்கள் நினைத்ததைவிட கிணறு மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதிலிருந்து ஏறி வர எந்தப் பிடிப்போ, படிகளோ எதுவுமே இல்லை. சேறும் சகதியும் வெளியேறுவது கடினமாக இருந்தது.

அதனால், சுந்தர் மிகவும் சோர்ந்து போனார். ஆனால், சிவா சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தார். பிறகு யோசிக்க ஆரம்பித்தார். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவர் கண்ணில்பட்டது. அதைப் பார்த்ததும், அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து தட்டித்தட்டி சிறு மூங்கில் கழி போல் செய்தார்.

சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கி, வந்தார். அந்தக் கல்லால் வேரைத் இரு துண்டுகளாக வெட்டி எடுத்தார். வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம் என சுந்தரை அழைத்தார். ஆனால் அவர் பயந்து நடுங்கி சிவாவிற்கு வர மறுத்து விட்டார்.சிவா நண்பனை சுமந்து செல்லவும் முடியாது.அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது.

அதனால், சிவா ஒரு சில நிமிடங்கள் யோசித்து, பின் சுந்தரிடம் எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும். அதைச் சொன்னால் எந்தவித பயமும் வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லி தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றார். அதைக் கேட்டதுமே சுந்தர் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக என்ன மந்திரம் அது, சொல் என்றார். உடனே சிவா  இது என்ன நமஇவெயா... ? என்று சுந்தர் கேட்டார்உனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா? என்று சிவா கேட்டதும், இருக்கிறது. என்று சுந்தர் கூறினார்.

அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல் என்று சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. சிவா கூறினார். அதனால், சுந்தரும் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.

உடனே அவர் மனதிலும் நம்பிக்கை உண்டானது. பிறகு இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள். வழியில் சுந்தர், சிவாவிடம் எனக்குத்  தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய்? நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி      எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவதுஉனக்கு தெரியுமா? அவற்றையும் சொல்லித் தருகிறாயா? என்று கேட்டார்.

அதற்கு சிவா, சிரித்துக் கொண்டே, நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு சொல்லித் தந்தது மந்திர வார்த்தை இல்லை. 

மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை போக்கி உன்னை நம்பிக்கையுடன் செயல்பட நான் சொல்லியது. நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் (நமஇவெயா) முதல் எழுத்துக்கள்தான் என்று கூறினார்

இன்றைய செய்திகள்

08.08. 2023

*மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றம்.

* தன் நாட்டில் ஒரு கிராமத்தையே காலி செய்யும் ரஷ்யா. இந்தியாவிற்கு போட்டியாக விண்வெளி முயற்சி.

* தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும்-  வானிலை ஆய்வு மையம் தகவல்.

*ஆர்சிபி அணியை தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது ஹைதராபாத் அணி.

*வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ காப்.

Today's Headlines

*Delhi Emergency Ordinance Amendment Bill is passed in the State Assembly through voting.

* Russia evacuates a village in its own country. Competing with India's space effort.

* It will be hot in Tamil Nadu today and tomorrow - Information from Meteorological Department.

*Hyderabad has appointed a new coach after RCB.

*Coco Cope wins Washington Open tennis title
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive