தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரிசையில், அரசு பள்ளிகளில் வகுப்பறை நிர்வாகத்தை மேம்படுத்த, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை, மாணவர்களிடம் உரையாடுதல், அவர்களை பாடத்தில் கவனம் பெற செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய, கல்வி அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக ரீதியாக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், வகுப்பறை நிகழ்வுகள், வகுப்பறையில் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் ஆய்வுகள், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்து, பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படியே app என்று வைத்து எமிஸ் ஒரு app ல் வேலையும் வைத்து எப்படிடா கல்வித்திறனை சோதிப்பது? எல்லாரும் பாஸ் என ற நிலைமையை பற்றி அமைத்தாலன்றி நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. Torturing CEOs, DEOs, HMs, and trs and never to enhance the edn std for students.
ReplyDelete