மத்திய அரசின் ஆலோசனைப்படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட்' தகுதி தேர்வு நடத்தும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 'நெக்ஸ்ட்' என்ற பெயரில், தேசிய தகுதி தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டது.
அதில், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், 'நெக்ஸ்ட் - 1' தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும்.
அதை தொடர்ந்து, மருத்துவ படிப்பை நிறைவு செய்த பின், 'நெக்ஸ்ட் - 2' தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான், முதுநிலை மருத்துவம் படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவையை தொடரவும் முடியும்.
இத்தேர்வு, வெளிநாடுகளில் கட்டாயம். இந்தியாவில் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இத்தேர்வு முறையால், மாணவர்களின் பயிற்சி திறன் பாதிக்கப்படும் என, மத்திய அரசுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒருங்கிணைப்பு துறை செயலர் டாக்டர் பல்கேஷ் குமார், நெக்ஸ்ட் தேர்வு நடத்தும் முடிவை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளார்.
அதில், 11ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்த ஆலோசனைபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...