யு.ஜி.சி., திறந்தநிலைக் கல்வி மற்றும் தொலைத்துார கல்வி முறைக்கான 2020 விதிமுறைகளில், ஆன்லைன் கல்வி முறை, நேரடி கல்வி முறையில் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை பட்டங்களும் சமமானதாகும் என்ற விதிமுறை, பிரிவு, 22க்கு தனியார் சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் எம்முறையில் பட்டம் பெற்றார்கள் என்பதை மதிப்பெண், பட்டச்சான்றிதழில் அச்சிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லுாரிகளின் சங்க தலைவர் அஜீத்குமார் லால் மோகன் கூறியதாவது:
ஆன்லைன், தொலைதுார கல்வி முறையை வரவேற்கிறோம். ஆனால், நேரடி கல்வி முறையில், கல்வியின் தரத்தை உறுதிசெய்வதற்காக, பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் தரத்துக்கு கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் உட்பட்டுள்ளனர். ஆன்லைன், தொலைதுார கல்விமுறையில் விதிமுறைகள், கல்வியின் தரம் பூர்த்தி செய்யாததால் கல்வியின் தரம் குறைகிறது.
ஆன்லைன் திறந்த நிலை கல்விமுறையில் பெறப்பட்ட பட்டங்கள், நேரடி கல்விமுறைக்கு பெறப்படும் பட்டங்களுக்கு சமமானதாக கருத முடியாது. வளாக பயிற்சியின் வாயிலாக, அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு, மொழிப்புலமை, தொழில்நுட்ப அறிவு, ஒழுக்கம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் வகையில் இக்கல்வி வடிவமைக்கிறது.
கட்டமைப்பு, ஆசிரியர்களின் கல்வித்தரம், மாணவர்களின் எண்ணிக்கை, ஆய்வக வசதி, நுாலகம், மைதானம் என கட்டமைப்புகளின் வாயிலாகவும், இளநிலை, முதுநிலை பிரிவின் கல்வித்தரம் உறுதிசெய்யப்படுகிறது.
நாட்டு நலப்பணித்திட்டம், விளையாட்டு, ஆய்வக நேரம் போன்றவற்றுக்கும் மதிப்பெண் அளிக்கப்படுகிறது. இதனால், யு.ஜி.சி.,யின் அறிவிப்பை எதிர்த்து 'ரிட்' மனு தாக்கல் செய்ய சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...