அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி குறைவு, எனவே அரசுப் பள்ளிகள் தரம் தாழ்ந்தவை என்ற கருத்துருவாக்கம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.
அரசுப் பள்ளளிகளில் இடைநிற்றல் அதிகம் என்றும் பிரச்சனை பெரிதாக்கப்பட்டது.
அரசுப் பள்ளியில் சேராமல் தனியார் பள்ளியில் சேர்க்கப்படும் குறிப்பிட்ட சதவீத மாணவர்களுக்கு அரசே கட்டணம் அளிக்கிறது.
ஓரளவுக்கு வசதி உள்ளவர்களும், சராசரிக்கும் மேல் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் (அரசின் திட்டமிட்ட உதவியால்) சென்றுவிடுகின்றனர்.
வசதி குறைந்தவர்களின் குழந்தைகளும், சராசரிக்குக் கீழ் உள்ள குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறை அரசுப் பள்ளிகளில் மிக அதிகம்.
தொடக்கப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஐந்து வகுப்புகளுக்கு 2 அல்லது 3 ஆசிரியர்களே உள்ளனர்.
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான ஐந்து வகுப்புகளுக்கு 5 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கிராமப் பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்கள் பணயிடங்கள் பெரும்பாலும் காலியாகவே இருக்கும்.
மாணவர்களின் அக்கறையின்மை, ஆர்வமின்மை, பெற்றோரின் அறியாமை, . . . ஆகியவற்றை மீறி இத்தகு வெற்றி ஈட்டும் அரசுப்பள்ளி
ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இதையும் மீறி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 80% க்கு மேல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்ச்சி அளிக்கின்றனர்.
--- சிவ ரவிகுமார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...