மஹாராஷ்டிராவில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனை நிரப்ப தற்போது அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
மகாராஷ்டிரா பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் இல்லாததால் கற்பித்தலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை எழுந்தது. தற்போது ஆசிரியர் பணி நியமனம் செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதனால் தான் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புதலில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 30,000 ஆசிரியர்களும், அடுத்ததாக 20,000 ஆசிரியர்களின் விதிகளின் படி நியமிக்கப்படுவார்கள்.
இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். தற்போது ஆசிரியர் காலிப்பணியிடங்களால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஓப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...