சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுளாவிற்கு அழைத்துச் செல்லுப்படும் என பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்திருந்தார். இதையடுத்து, ரூ.11 லட்சம் செலவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5,200 மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் அழைத்து செல்லப்படுகின்றனர். முதற்கட்டமாக இன்று 521 மாணவ, மாணவிகள் அண்ணா நூலகம், பிர்லா கோலரங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இருந்து மாணவர்கள் கல்வி சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைத்த மேயர் பிரியா, மாணவர்கள் செல்லும் பேருந்துகளை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மேலும் தாமதமாக பணிகளை மேற் கொள்ளும் ஒப்பந்ததார்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும், பின்னர் அபராதம் விதிக்கப்படும், தூர் வாரும் பணிகளை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். சென்னை புறநகரில் இருநது மாநகராட்சியுடன் புதிதாக 139 பள்ளிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
இதில் மிகவும் சேதமடைந்த 46 பள்ளிகள் கண்டறியப்பட்டு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் பள்ளிகளை சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளது மேயர் பிரியா கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...