திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் :212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்:
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
பழமொழி :
A snake could make an army panic
பாம்பென்றால் படையும் நடுங்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல.
2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.
பொன்மொழி :
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது.
காமராஜர்
பொது அறிவு :
1. காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
ஜூலை 11
நீதிக்கதை
சிங்க தோல் போர்த்திய கழுதை –
ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஒரு கழுதை வழி மாறி அந்த காட்டிற்குள் வந்தது. அந்த கழுதை வரும் வழியில் பல விலங்குகள் பயத்துடன் ஓடிக்கொண்டிருந்ததாம். அதில் ஒரு மானும் இருந்தது.
அப்பொழுது அந்த கழுதை மானிடம் ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன? என்று கேட்டது. அதற்கு மான் இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதனை கண்டுதான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம் என்று கூறிவிட்டு சென்றது.
இருப்பினும் கழுதை சிங்கத்தின் வீரத்தை தெரிந்து கொண்டே அந்த காட்டிற்குள் சென்றது. சிறிது தூரம் கடந்து சென்றதில் கழுதை களைப்படைந்துவிட்டது. கழுதை அந்த காட்டிற்குள் ஒரு ஓடையைப் பார்த்தது.
பின் கழுதை தண்ணீர் அருந்த அந்த ஓடைக்கு சென்றது. அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் தோலை அங்கிருந்துப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.
அதனைப் பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துக் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுதையும் பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்ததினால் மற்ற விலங்குகளும் கழுதையை சிங்கம் என்று நினைத்து பயந்து ஒதுங்கி சென்றன.
மிருகங்கள் அனைத்தும் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழி விட்டு ஒதுங்குவதை பார்த்த கழுதைக்கு கர்வம் தலைக்கு ஏறியது. சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது, அப்பொழுது அங்கு ஒரு நரியை பார்க்கிறது.சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜா, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வரமாட்டேன் என்று கழுதையிடம் கூறியது.கழுதையும் சிங்கத்தை போல் கர்ஜிக்கணும்னு நினைத்து “ங்கெ ங்கெ” ன்னு கத்தியது. ஆகவே அதோட குரல் அது கழுதையினு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவே இல்லை.அதுவும் இல்லாம “எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு” என்றது கழுதை.
அதற்கு நரியோ கழுதையைப் பார்த்து முடியாது என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது என்று கூறியது.கழுதையும் அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு, தனது உண்மையான உருவத்தில் இருந்தது.
இந்த கதையின் நீதி:
நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம்.அடுத்தவர் போல வேஷம் போட்டாலோ அல்லது மற்றவர்கள் போல நடந்து கொள்வதாலோ அவமானம் தான் மிஞ்சும். ஆகவே நாம் நாமாகவே இருப்போம்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...