தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி, வகுப்பு IIIன் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்கள் பெயர்களுக்கெதிரே குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
தமிழ்நாட்டில் 5 கல்வித்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.
தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குனர் (நிர்வாகம்) இரா.பூபதி பள்ளிக்கல்வி இயக்கக துணை இயக்குனராக நியமனம் செய்துள்ளனர்.
- மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனராக அ.ஞானகவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக பெ.அய்யண்ணனை கல்வித்துறை நியமித்துள்ளது.
- தொடக்க கல்வி இயக்கக துணை இயக்குனராக (நிர்வாகம்) ஜி.அருளரசு நியமனம் செய்துள்ளனர்.
- பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக ஜோ.அஞ்சலோவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
- பூபதிக்கு பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குனராக (என்.எஸ்.எஸ்.)கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
- பெ.அய்யண்னனிடம் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
- ஞானகவுரியிடம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணை இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கியும் அரசு ஆணையிட்டுள்ளது.
இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...