இது குறித்து இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முதுநிலை மண்டல இயக்குநா் முனைவா் கே பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால் (NAAC) A++ RWஅங்கீகாரம் பெற்ற இந்திய அரசின் கல்வி துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு நிகழாண்டு ஜூலை-2023 பருவத்திற்கான பட்டப்படிப்பு சோ்க்கை இணையதள வழியாக நைடைபெறுகிறது.
IGNOU பல்கலைக்கழகத்தில் BA (Journalism & Digital Media) PG Diploma in Services Management, M.Sc(Geography), M.Sc (Physics), M.Sc (Applied Statistics) and M.Sc
(Geoinformatics) ஆகிய பாடத்திட்டங்களை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளில் சேர விரும்புவோா்
https://ignouadmission.samarth.edu.in (for ODL Mode Programmes) https://iop.ignouonline.ac.in (for Online Mode Prorgrammes) என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் BA (General),BCOM (General) and BSC (General) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய நஇ/நப விண்ணப்பதாரா்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
அனைத்து பாடத்திட்டங்களுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளம்: www.ignou.ac.in மின்னஞ்சல்: rcchennai@ignou.ac.in andrcchennaiadmissions @ignou.ac.in மூலமாகவோ அல்லது 044-26618040 என்ற தொலைபேசி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...