அரசாணை எண். 165 நாள்: 31 5 2023 ன் படி, ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் சிறப்பு ஓய்வூதியர் கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் வாழ்வு சான்று (மஸ்டரிங்) வரும் 01.07. 2023 முதல் புதிய நடைமுறையை அரசு அமல்படுத்த உள்ளது.
இதுவரையில் 2022 ல், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மஸ்டரிங் செய்யப்பட்டது!
இனி வரும் காலங்களில் ஓய்வூதியர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் தங்கள் வாழ்நாள் சான்றினை பதிவு செய்து கொள்ளலாம்!.தவறினால் ஒரு மாதம் வரை அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஜூலை மாதம் ஓய்வு பெற்றிருந்தால் அவர் ஜூலை மாதத்தில் வாழ்நாள் சான்று பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாழ்நாள் சான்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதுவும் தவறும் பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
குடும்ப ஓய்வூதியர்கள் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களுக்கு அந்த ஓய்வூதியம் எந்த மாதத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டதோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்று பதிவு செய்ய வேண்டும்!
வாழ்நாள் சான்றினை நேரடியாக கருவூலத்திலோ அல்லது அருகில் உள்ள தபால் நிலையத்தில் அல்லது இ சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பு:
2023 ஆம் ஆண்டு, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவு செய்ய வேண்டியவர்கள், ஜூலை மாதம் பதிவு செய்து கொள்ளலாம்!
மற்றவர்கள் அவரவர் ஓய்வு பெற்ற மாதங்களில் பதிவு செய்து கொள்ளலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...