அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட நிதி வழங்கிய, பள்ளித் தலைமை ஆசிரியரை, தலைமைச் செயலர் இறையன்பு, நேரில் அழைத்து வாழ்த்தினார்.
மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா, உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம்.
அவர், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்ட, 10 லட்சம் ரூபாயை, கலெக்டரிடம் வழங்கினார்.
இதை அறிந்த தலைமைச் செயலர் இறையன்பு, அவரை தலைமைச் செயலகம் வரவழைத்து பாராட்டி, புத்தகம் பரிசாக வழங்கினார். பொதுத்துறை செயலர் ஜகந்நாதன் உடனிருந்தார்.
உறுதிமொழி ஏற்பு
தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில், அனைத்து துறை செயலர்கள், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...