அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் கீதா அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், எம்.பில்., -- பிஎச்.டி., முடித்தவர்களுக்கு, ஊக்க ஊதியம் கேட்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற நடைமுறையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, அழகப்பா பல்கலை, பெரியார் பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், 2016ம் ஆண்டு அல்லது அதற்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், 2016க்கு பின், எம்.பில்., - பிஎச்.டி., பட்டம் பெற்றால், அதற்கு ஊக்க ஊதியம் பெற முடியாது என, அரசு தெரிவித்துள்ளது.
எனவே, கல்வியியல் கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், இந்த விதிகள் பொருந்தும்.
அதன்படி, 2016க்கு பின் நியமிக்கப்பட்டு, பிஎச்.டி., - எம்.பில்., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் கிடையாது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...