மாணவர்கள் மின்னணு உபகரணங்களை பயன்படுத்தி அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், பொது அறிவு தொடர்பான செய்திகள், அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்தலாம். அதில், மாதந்தோறும், மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேச வாய்ப்பு வழங்கலாம்.
இவ்வாறு செய்தால், வாசிப்பது மட்டுமின்றி, தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்க சாத்தியக்கூறுகள் ஏற்படும். சிறந்த முறையில் நுாலை மதிப்புரை செய்கிற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்குவதோடு, பங்கேற்கும் மாணவர்களுக்கு நல்ல புத்தகங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
இது, அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும், ஆக்கப்பூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும் என்பதால், இதை விரிவாக செய்யவும்.
இது அவர் தலைமை செயலாளராக இருக்கும் போது தெரியவில்லையா?, கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்.உங்க system _மே சரியில்லை சாமியோவ்.
ReplyDelete