Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.06.2023

   


 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

விளக்கம்:

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.


பழமொழி :


A drowning man will catch at a straw

நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.

பொன்மொழி :

என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன்! காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல! 1000 தோல்விகளை பார்த்தவன் - தாமஸ் ஆல்வா எடிசன்

பொது அறிவு :

1. இந்திய தேசிய சின்னத்தின் பொன்மொழி என்ன?

விடை: சத்யமேவ ஜெயதே

2. இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நிதி அமைச்சர் யார்?

விடை: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

English words & meanings :

 withered - become dry and shriveled, காய்ந்துபோகுதல். pursue - chase,தொடர

ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் :யோகா என்பது ஒரு வாழ்க்கை கலை. விஞ்ஞானம், மெஞ்ஞானத்தை பெருவதற்குரிய நடைமுறைப் பயிற்சி, மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கு இது உதவும். முறையான பயிற்சி அவசியம்.


ஜூன் 20


கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

நீதிக்கதை

ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து" எந்த பொம்மை வேண்டும் என்றான் . அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து "அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். அதற்கு சிரித்துகொண்டே அந்த முதலாளி உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம் "அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டிர்களே அய்யா ", என்றான். அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது அவனுக்கு அந்த சிப்பிகள் தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம் தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன் மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றோ ஒரு நாள் அவன் பெரியவன்

ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்கபட வேண்டும் என்றார்.

இன்றைய செய்திகள்

20.06. 2023

*தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்

* சென்னையில் பகலில் 40. கி.மீ வேகத்தையும், இரவில் 50 கி.மீ வேகத்தையும் கடந்து ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதிவு செய்யப்படும்.

*தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீட்டிக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கனமழை.

*கோடை மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு.

*பூண்டி - சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் கரைகளில் விரிசல். விரிசலை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை.

*TNPL தொடரில் மதுரை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி சொந்த மண்ணில் வெற்றி.

Today's Headlines

*12 IAS Officers transferred - ordered Tamilnadu Government.

 * In Chennai, if you drive over 40 Km during the day and 50 km at night, a case will be registered as fast driving.

 *Rains will extend in Tamil Nadu for the next 3 days.  Heavy rains in Chennai due to upper air cyclonic circulation.

 *Salt production is affected by summer rains in Vedaranyam.

 *Broken banks in Bundi - Sathyamurthy Reservoir.  People appealed that the crack should be repaired.

 * Dindigul defeated Madurai by 7 wickets in the TNPL series at the hometown
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive