சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 நாட்களாக தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.
அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் இன்று 5ஆவது நாளை எட்டியது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, சட்டச்சிக்கலை நீக்குவது தொடர்பாக உறுதியளித்துள்ளோம் என்றார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களுக்கு சீமான், அண்ணாமலை, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...