Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விளையாட்டு வீரர்களே..! விளையாடிக் கொண்டே படிக்க விருப்பமா ? இது உங்களுக்காக

SDAT Sports Hostel: விளையாட்டு வீரர்களே..! விளையாடிக் கொண்டே படிக்க விருப்பமா ? இது உங்களுக்காக

2023 –2024ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் மாணவ / மாணவியர் சேர்க்கை தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் கீழ்கண்ட மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி ( SPORTS HOSTEL 2023 - 2024 )

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதி

ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான முதன்மைநிலை விளையாட்டு மைய விடுதி

சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி (ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி

சத்துவாச்சாரி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24.05.2023 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கான தேர்வுப் போட்டிகள் கீழ்கண்ட விளையாட்டுக்களில் நடைபெறும்

1.தடகளம்
2. இறகுப்பந்து
3. கூடைப்பந்து
4. குத்துச்சண்டை
5. கிரிக்கெட்
6. கால்பந்து
7. வாள்சண்டை
8. ஜிம்னாஸ்டிக்
9. கைப்பந்து
10.வளைகோல்பந்து
11. நீச்சல்
12. டேக்வாண்டோ
13. கையுந்துபந்து
14. கபாடி
15. மேசைப்பந்து
16. டென்னிஸ்
17. ஜூடோ
18. ஸ்குவாஷ்
19. வில்வித்தை

மாணவியர்களுக்கான தேர்வுப்போட்டிகள் கீழ்கண்ட விளையாட்டுக்களில் நடைபெறும்

1.தடகளம்
2. இறகுப்பந்து
3. கூடைப்பந்து
4. குத்துச்சண்டை
5. கால்பந்து
6. வாள்சண்டை
7. கைப்பந்து
8. வளைகோல்பந்து
9. நீச்சல்
10. டேக்வாண்டோ
11. கையுந்துபந்து
12. கபாடி
13. டென்னிஸ்
14. ஜூடோ
15. ஜிம்னாஸ்டிக்
16. ஸ்குவாஷ்
17. வில்வித்தை
18. பளுதூக்குதல்
19. மேசைப்பந்து

ஆன்லைன் விண்ணப்பம்

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும்

ஆர்வமுள்ள மாணவ / மாணவியர்கள் விளையாட்டு விடுதி, முதன்மை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5.00 மணி ஆகும். செங்கல்பட்டு மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் எஸ் ஆர் எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி, பொத்தேரி காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு மாவடத்தில் 24.05.2023 அன்று காலை 7.00 மணிக்கு நடைபெரும்.

மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை தொலைபேசி 7401703461 , 9941431589 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive