தலைமைச் செயலகத்தில், சட்டசபை கூட்ட அரங்கில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று காலை, 11:00 மணிக்கு, அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
இம்மாத இறுதியில், முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் பலரும் வெளிநாடு செல்ல உள்ளனர். இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
சில தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோவால் ஏற்பட்ட சர்ச்சை, சில சட்ட திருத்தங்களால் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஆட்சி பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மூன்றாம் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள்; ஜூன், 3ல், கருணாநிதியின் நுாற்றாண்டு துவக்க விழாவையொட்டி, புதிய திட்டங்களை அறிவிப்பது ஆகியவை குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவையில் மாற்றம் செய்ய, முதல்வர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...