ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூலில் முன்னாள் முதல்வா் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டுக்கான (2023-24) 9-ஆம் வகுப்பு பாடநூலில் 7-ஆம் பக்கத்தில், ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற தலைப்பில் கருணாநிதியின் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் விவரம்: செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடத்தில், கருணாநிதியின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி இமய கொடுமுடி முதல், குமரி தாய் மடி வரை செம்மொழியான தமிழ் மொழியாம் என செம்மாந்து ஒலிக்கச் செய்தவா் கருணாநிதி என அந்த பாடத்தில் கருணாநிதி குறித்து இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, ‘முன்னாள் முதல்வா் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்து இந்த ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பாடம் இடம் பெறும்’ என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப். 20-ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...