Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிட்ட பார்வை, தூரப்பார்வை பிரச்சனையே வரக்கூடாதா? இதை அவசியம் கடைபிடியுங்கள்!





நம்மில் சிலருக்கு கண்பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கும்.

இந்த கண் பார்வை குறைப்பாட்டை குணப்படுத்த சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் கர்பார்வையை அதிகரிக்கவும் சில வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ முறைகள்.

1. கண் பயிற்சி

கண் பார்வையை அதிகராக்க நாம் சில கண் பயிற்சிகளை அதாவது Eye Exercise செய்ய வேண்டும். தலையை ஆட்டாமல் கண் கருவிழிகளை மட்டும் அசைத்து இந்த பயிற்சியை நாம் செய்ய வேண்டும். கண் விழிகளை வலப்பக்கம் சிறிது நேரமும், இடது பக்கம் சிறிது நேரமும் மேலுகவும் கீழாகவும் இந்த கண் பயிற்சியை செய்ய வேண்டும்.

இந்த கண் பயிற்சி செய்வதால் கண் பார்வை திறன் அதிகரிக்கும். கண் வறட்சி அடைவது தடுக்கப்படுகின்றது. கண்களுக்கும் மூளைக்குமான செயல்திறன் அதிகரிக்கும்.

2. சூரியனை பார்த்தல் (சன் கேசிங்)

காலை நேரத்தில் வரக் கூடிய சூரியனை வெறும் கண்களில் பார்க்க வேண்டும். இந்த சன் கேசிங் முறையை செய்யும் பொழுது வெறும் கால்களில் இருக்க வேண்டும். காலையில் சூரியன் உதித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகும், மாலையில் சூரியன் மறையப் போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் இந்த சன் கேசிங் முறையை பின்பற்ற வேண்டும்.

இதனால் கண் பார்வை திறன் பல மடங்கு அதிகரிக்கின்றது. கண்களுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். இதை பின்பற்றுவதால் மூளையில் செரட்டொலின் ஹார்மோன் சுரக்கவும், தூக்கத்திற்கு உதவும் மெலட்டொனின் ஹார்மேன் உற்பத்தி செய்யவும் உதவியாக உள்ளது.

3. வெள்ளரிக்காய்

கண் பார்வை குறைபாடு மற்றும் கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு கண்களில் ஏற்படும் வறட்சிதான் காரணம். இதை தடுக்க நாம் வெள்ளரிக்காயை பயன்படுத்தி கண்களுக்கு ஐ பேக் போட வேண்டும்.

இதை செய்ய வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி அதை கண்களில் வைத்து 15 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும். 15 நிமிடம் கழிந்து இதை நீக்கி விடலாம். இந்த வெள்ளரிக்காய் ஐ பேக் செய்வதால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கண் நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தாலே கண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

* டிஜிட்டல் திரைகளை தவிர்த்தல்

நாம் அதிக நேரம் கம்பியூட்டர், லேப்டாப், மொபைல் போன் போன்ற டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து வெளிவரக்கூடிய அதிகப்படியான வெளிச்சம் கண்களில் உள்ள ரெட்டினா செல்களை பாதிக்கின்றது. இதன் விளைவாக கண் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் இந்த டிஜிட்டல் பொருள்களின்(Computer, Laptop, Mobile Phone) பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி கண்களை.சிமிட்டுவது, அரை மணி நேரம் இடைவெளி எடுப்பது, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுதல் போன்றவற்றால் இந்த டிஜிட்டல் ஸ்கிரீன் மூலமாக கண்களுக்கு வரும் ஆபத்தை தடுக்கலாம்.

5 கண்களுக்கு உகந்த உணவுகள்

கண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ளாமல் கண்களுக்கு சத்துக்கள் தரக்கூடிய உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும். கண்களுக்கு விட்டமின் ஏ, வைட்டமின் ஈ சத்துகளும் தேவை. இதனால் இந்த சத்துக்கள் நிறைந்த மீன், முட்டை, கீரைகள், கேரட், குடமிளகாய், பப்பாளி பழம், பாதாம், சர்க்கரைவல்லி கிழங்கு ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி வகைகளில் திணை அரிசியும் சாப்பிடலாம்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive