ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். 2023-24 கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதல்நிலைத் தேர்வுகடந்த ஜனவரியில் நடத்தப்பட் டது.
இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதல்நிலைத் தேர்வு ஏப்.6 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த விவரங்களை jeemain.nta.nic.in என்றஇணையதளத்தில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை(என்டிஏ) தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...